Monday, November 21, 2011

ஒரிஜினல் சான்றிதழ்கள் பத்திரம்

,
இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது வெகு சுலபமாகிவிட்டது. அவ்வாறு செல்லும்போது தங்கள் உடைமைகளுடன் சான்றிதழ்களையும் சேர்த்தே கொண்டு செல்வர். அவ்வாறு போகும்போது சான்றிதழ்களை தவற விட்ட கதைகள் பல உண்டு. என்னுடைய உறவினர் ஒருவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி தரவிட்டதால் இராணுவத்திற்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

அப்படி ஒரு இப்பூவுலகில் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனாலும் அப்படி ஒரு நிலை வந்தாலும் உங்கள்   சான்றிதழ்கள் உங்களிடமே வந்து சேர்வதற்க்கு ஆவண செய்து வைப்பதை பற்றி இன்று பார்ப்போம்.

வேலை தேடி செல்லும்பொழுது உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்லாது இருப்பது மிகவும் நலம். அதையும் மீறி எடுத்து செல்ல வேண்டும் என்றால் சான்றிதழ்கள் இருக்கும் file-இல் (அல்லது பையில்)  உங்கள் தொலைபேசி எண்ணுடன் கூடிய முகவரியை மறக்காமல் வைக்கவும்.
கூடவே ஒரு நல்ல காகிதத்தில் "மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம், என்னுடைய சான்றிதழ்களை தவற விட்டமைக்கு வருந்துகிறேன், தாங்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களில் தான் எனது வாழ்க்கையே உள்ளது தயவு செய்து கீல்கானும் முகவரியை/ தொலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள்" என எழுதி வையுங்கள், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கவும்.
ஒருவேளை எங்காவது உங்கள் சான்றிதழ்களை இழக்க நேர்ந்தால் உங்கள் கைக்கே திரும்பி வர வாய்ப்புகள் அதிகம். 
மேலும் படிக்க...

Saturday, November 19, 2011

நம்ம பூமி மிகவும் சிறியது

,


முதலில் எனது நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், ஏனெனில் இந்த பதிவில் உள்ள படம் என்னுடையது அல்ல, நான் தோழர் மனசாலி அவர்களின் வலைப்பூவை பார்வியிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்டது, அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இங்கு பகிர்கிறேன்.

கொசுறு:

நாம் நம்முடைய அயல் நாட்டையே பெரியது சிறியது என்று வகைப்படுத்தி பொறாமை கொள்கிறோம், ஆனால் நம்முடைய ஒட்டுமொத்த பூமியுமே ஒன்றும் அவ்வளவு பெரிது இல்லை என்று தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க...

Friday, November 11, 2011

தயவு செய்து யாரிடமும் சொல்லாதீர்கள்

,
அன்பான தமிழ் வாசகர்களுக்கு..
என்னுடைய என்னுடைய புதிய முயற்சியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம், சும்மா படித்துதான் பாருங்களேன்...

ன்பான மனைவிக்கு மல்லிகையை
சையாய் சூடிட வாங்கிச்சென்றேன்
ன்பமாய் சூடிக் கொள்ளாமல்
கையுடன் வந்தென்னிடம்- அன்பே
ங்களுக்கேன் வீண் சிரமம்
ரில் அய்யன் வாங்கிவருவார்-அவர்போல்
னக்கிந்த பூவை வாங்கிட
றுபூட்டி உழுதிட வேண்டா,
ய்யமென்று தங்கல்பால் நான்வரின்
வ்வாமல், வினவி- புறத்தே
டிட செய்தால் ஐய்யத்தை
ஒளவையைவிட பேருபெறுவேன் நானென்றாள்.

படித்துவிட்டீர்களா?
இப்பொழுது உனக்கு ஏனடா இந்த வீண் முயற்சி என்று திட்ட தோன்றினால், இருக்கவே இருக்கிறது பின்னூட்டப் பெட்டி (அதாங்க நண்பரே.. comment box)
மேலும் படிக்க...

Thursday, November 10, 2011

புதிதாக பிளாக் துவங்க துணுக்குகள்

,
இணயத்தில் புதிதாக பிளாக் துவங்குவோர்க்கென துணுக்குகள் தர ஆயிரக்கணக்கில் ஆட்கள் உள்ளனர். இருந்தாலும் அதில் துவங்கியதற்கு பின்னர் என்ன செய்யவேண்டும் என்றே பலர் கூறியுள்ளனர். ஆகவே இன்று எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பிளாக் முகவரியை தேர்ந்தெடுப்பது: 
முடிந்த வரை உங்கள் பிளாக் முகவரியை user friendly மற்றும் SEO friendly-யாக தேர்ர்ந்தெடுக்கவும், அதற்க்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கை எதற்க்காக தூவுங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும்.

தயவு செய்து template-ஐ மாற்றுங்கள்:
ப்ளாகர் default-ஆக மொக்க template கொடுத்திருக்கும் தயவு செய்து அதை மாற்றுங்கள், அப்பொழுதுதான் உங்கள் பிளாக் பார்பதற்க்கு மிகவும் ப்ரொஃபஷனல்-ஆக இருக்கும். மேலும் நல்ல template மற்றும் custom டொமைன் இருந்தால், புதிதாக வருகை தரும் பலரால் உங்களுடையது வலைபூவா அல்லது வலைதளமா என்று கணிக்க இயலாது.
 [பின்குறிப்பு: இப்பொழுது .in டொமைன் ஒரு வருடத்திற்க்கு இலவசமாக கூட கிடைப்பதாக கேள்வியுற்றேன்]

எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்:
இப்பொழுதுதான் உங்களுக்கு என்ன எழுத வேண்டும் என்ற சந்தேகம் வரும், நிறைய விஷயம் தெரிந்தவர்கள் கவலையில்லாமல் நிறைய நல்ல நல்ல Articles எழுதுவார்கள் ஆனால் அவர்களை விட நிறைய தெரிந்ததினாலோ என்னவோ சிலருக்கு ஒன்றுமே தோன்றாது. அப்படி இருப்பவர்களுக்கென்றே Odesk என்று பிரித்யோகமான வலைத்தளம் ஒன்று உள்ளது, உங்கள் தேவையை அங்கு பதிவு செய்து விட்டால் 1$-க்கும் குறைவான விலையில் நல்ல தனித்துவமான Articles கிடைக்கும். மனமிருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று உலகிற்கே பறைசாற்றுங்கள்:
உங்கள் வலைப்பூவை Facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களிலும்,  Digg, Technorati & Yousaytoo போன்ற ஆங்கில திரட்டிகளிலும் பிரபலப்படுத்துங்கள். மேலும் சக பதிவர்களின் வலைபூவையும் படித்து பின்னூட்டமிடுங்கள். அதுபோக நிறைய discussion forums-இல் கேட்கப்படும் கேள்விக்கு விடை தெரிந்தால் மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியை குறிப்பிட்டு பதில் அளியுங்கள். உங்கள் template-இல் Meta tags மற்றும் keywords சேர்த்தால் google போன்ற தேடுதளத்தில் கண்டுபிடிக்க படுவீர்கள்.






இன்றைய செய்தி:

Facebook-இல் பதிவுகளை automatic-ஆக பகிரும் வசதி கூடிய விரைவில் நிறுத்தப்பட உள்ளது. இனிமேல் தனிதனியாகத்தான் link-களை பகிர முடியும்.


படித்ததில் பிடித்தது:


காற்றைப்பிடிக்கும் கணக்கை அறிந்தவன்
கூற்றை உடைத்து குதித்திடுவானே..

மேலும் படிக்க...

Friday, November 4, 2011

உங்கள் மெயில் ID சொல்லாமல் Contact me பக்கம் வைக்க

,
நம்மில் வலைப்பூ வைத்திருக்கும் பலர் எரிதக்காரர்களுக்கு (spammers) அஞ்சி  தங்களுடைய mail id-ஐ வெளியிட விரும்ப மாட்டார்கள் (குறிப்பாக பெண்கள்).
நாம் பல வலைத்தளங்களில் பார்திருப்போம் contact us என்பதை கிளிக்கினால் நம்முடைய பெயர் மற்றும் மெயில்-ஐ தான் கேட்கும், நாம் யாரிடம் கேட்க போகிறோம் என்பதை ரகசியமாக வைத்திருப்பார்கள்.

 நம்முடைய வலைபூவிலும் அவ்வாறு வெகு சுலபமாக வைக்கலாம். என்னுடைய வலைப்பூ one way தான் அப்புறம் எதற்க்கு நான் அதை வைக்க போகிறேன் என்று கேட்டால், உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் உங்களுக்கு feedback/suggestion கொடுக்கவாவது இது பயன்படும் தானே.

சரி இப்பொழுது அதை எப்படி அமைப்பது என்று பார்போம்.

முதலில் contactify.com -க்கு சென்று register செய்து கொள்ளவும்.



பிறகு உங்கள் contact link-ஐ அவர்கள் தருவார்கள் (mail-ஐ உறுதி செய்ததும் அது ஆக்டிவேட் ஆகும்)

பின்னர் ப்ளாகர்-க்கு வந்து design-page elements வந்து add gadget-ஐ கிளிக்கவும், அதில் link list என்பதை தேர்ந்தெடுக்கவும். title என்னை தொடர்புகொள்ள (அல்லது கருத்து சொல்ல, feedback) போன்று ஏதாவது கொடுக்கவும். New Site URL-இல் உங்களுக்கு mail வந்த URL (இது போல இருக்கும் http://www.contactify.com/8fab6). New site name-இல் உங்கள் பெயர் கொடுக்கலாம்.


இப்பொழுது save கொடுத்து வெளியேறவும்.

இந்த முறையை பயன்படுத்தி பெண்களும் contact me பக்கத்தை பயப்படாமல் வைக்கலாம்.

மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011