Tuesday, June 19, 2012

என்ன? ஐ‌பில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை) பாகம்-2

,
நேற்று Eiffel Tower-அ விக்டர் லஸ்டிக்முதல் முறை விற்ற கதையை பார்த்தோம். இன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் மீதத்தை பார்ப்போம்.


சென்ற முறை Eiffel Tower-ஐ விற்ற போது எதும் பிரச்சனை வராமல் போகவே, மீண்டும் ஒரு மாதம் கழித்து பாரிஸ் வந்த விக்டர் வேறு 6 பழைய இரும்புக்காரர்களை (Scrap Dealers) வரவழைத்து பேரம் பேசினார். ஆனால் இந்த முறை காவல்துறைக்கு தகவல் கசிந்ததுவிட்டது. இருப்பினும் லஸ்டிக் தப்பிவிட்டார்.

தனது 30 வயதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தேடபட்ட முக்கிய குற்றவாளியாக இருந்த போது விக்டர் அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். அமெரிக்க அரசால் மிகவும் முக்கியமான, வேண்டப்பட்ட குற்றவாளி (Count) என்று செல்லமாக (அல்லது பகிரங்கமாக) அழைக்கப்பட்டார். அந்த சயமத்தில் Al Capone என்ற நிழலுலக தாதா-விடம் சென்று தனது அடுத்த ஏமாற்று வேலைக்காக $50000 முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 60 நாட்களில் இரட்டிப்பு பணத்தை தருவதாக வாக்களித்தார். 

அந்த Al Capone தடியனை மற்றவர்களைப்போல ஏமாற்றினால் தனது எலும்பை எண்ணிவிடுவான் என்பது நமது நாயகனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. அதனால் அந்த பணத்தை பத்திரமாக லாக்கரில் வைத்துவிட்டு 60 நாட்கள் கழித்து தாதா-விடம் வந்து டீல் படுத்துவிட்டது என்று கூறினார். தாதா அவரின் எலும்பை முறிப்பதற்கு முன்னர் அவரின் பணத்தை அப்படியே ஒப்படைத்தார். அவரின் உன்னதனமான குணத்தை பாராட்டி Al Capone விக்டர்-க்கு (அவர் எதிர்பார்த்தபடி) $5000 பரிசாக அளித்தார்.

இத்துனை இமாலய சாதனைகள் புரிந்த நமது விக்டர் லஸ்டிக் (Victor Lustig) 1934-ஆம் ஆண்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டுசெல்லவேண்டிய ஒரு நாளைக்கு முன்னர் லஸ்டிக் சிறையிலிருந்து மிக புத்திசாலித்தனமாக தப்பினார். ஆனாலும் 27 நாட்கள் கழித்து Pittsburgh Pennsylvania-வில் மீண்டும் கைது செய்யப்பட்டார். December 5, 1935-இல் விக்டர் லஸ்டிக் 15-ஆண்டுகள் குற்றதிற்காகவும் 5 ஆண்டுகள் சிறையில் இருந்து தப்பியதற்காகவும் மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். March 9, 1947-இல் pneumonia-வால் தாக்கப்பட்டு 36 மணிநேரம் கழித்து தனது 57-வது வயதில் மரணமடைந்தார்.
மேலும் படிக்க...

Monday, June 18, 2012

என்ன? ஐ‌பில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை))

,
நீங்கள் படிக்கப்போகும் தகவல் நம்புவதற்கு சற்றே அல்ல மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். பாரீஸ்-இல் உள்ள Eiffel Tower-ஐ 1925-ஆம் ஆண்டில் பிரான்சு அரசாங்கம் பழைய இரும்பிற்கு விற்றது என்றால் யாரால் தான் நம்ப முடியும்.

உண்மையான கதைக்கு போவதற்கு முன்னாள் விக்டர் லஸ்டிக் (Victor Lustig) என்ற மாமனிதர் பற்றிய ஒரு அறிமுகம். அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறுவதற்கு பதிலாக, மற்றவர்களை முட்டாளாக்க கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் என்றால் அது மிகையாகாது. அவர் நாவில் சரஸ்வதி தாண்டவமாடினாளா என்றெல்லாம் எனக்குத்தெரியது ஆனால் அவர் அந்த நாவால் யாரையும் முட்டாளாக்கி விடுவார் என்று நன்றாகவே தெரியும்.

விக்டர் 1890-இல் போமியா(Bohemia) என்ற இடத்தில் பிறந்தார், பின்னர் பாரிஸ்-இற்கு குடிபெயர்ந்தார். முதலில் அவர் அட்லாண்டிக் பகுதிகளில் கள்ள நோட்டு இயந்திரம் என்று கூறி சில இயந்திரங்களை விற்றார். அதில் இரண்டு 100$ நோட்டுகள் மட்டுமே இருக்கும், அதன்பின் அது வெறும் தாளையே வெளியிடும். வாங்கியவர்களுக்கு அது தெரியும் முன்னர் அவர்கள் பணத்தை (சுமார் 30000$) சுருட்டிக்கொண்டு ஓடி விடுவார்.

1925-இல் பிரான்சு அரசு போரின் தாக்கத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது,Eiffel Tower-ஐ பாரமிப்பது மிகவும் கடினமான தேவையற்ற செயல் என்று நாளேடுகளில் விக்டர் படித்தார். அதை படித்தவுடன் மிகச்சிறந்த திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி 6 பழைய இரும்புக்காரர்களை இரகசியமாக ஒரு விடுதிக்கு வரவழைத்தார், தன்னைஅரசாங்கத்தில்Ministry of Posts and telegraph-இன் அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.Eiffel Tower-ஐ பராமரிக்க அரசால் நிதி ஒதுக்க முடியாது என்றும்,அதனால் அதனை விற்கபோவதாகவும் கூறினார். மேலும் இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் பெரிய கிளர்ச்சி ஏற்படுமென்று கூறி அந்த சந்திப்பை ரகசியமாக வைக்க வலியுறுத்தினார்.

அதன் பின்னர் அவர்களைEiffel Tower-க்கு அழைத்து சென்று சுத்தி காட்டினார். அவர் பேச்சால் மயங்கிய Andre Possion என்பவர் Eiffel Tower வாங்குவது சட்டபூர்வமான ஒன்று என்று நம்பி விக்டரிடம் பணத்தை கொடுத்தார். தான் ஏமாற்றபட்டோம் என்று உணர்ந்தபோது அவர் அதனை வெளியே சொல்ல வெட்கப்பட்டு யாரிடமும் கூறவில்லை. இதுதான் விக்டர் Eiffel Tower-ஐ முதன்முறை விற்ற கதை.

Victor Lustig-இன் ஏமாற்று வேலை இதனோடு முடிந்து விடவில்லை. மேலும் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் பின்னூட்டத்தில் கூறவும், இரண்டாம் பாகம் வெளிவரும் (நீங்கள் விரும்பினால் மட்டுமே). 
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011