Thursday, May 31, 2012

மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடிய ஆனந்த் அன்பருக்கு வாழ்த்துக்கள்

வாசகர்கள் (யாரேனும் இருந்தால்) மன்னிக்கவும் நீண்டகால இடைவெளிக்கு. பலநாட்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நமது தமிழ்கிழம் வலைப்பூ இன்று நமது அன்பர், இந்தியா-வின் மகுடம் தொடர்ந்து ஐந்து முறை பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்காக தூசி தட்டப்பட்டுள்ளது.
சகோதரர் ஆனந்த் அவர்களை வாழ்த்த வயதோ தகுதியோ இல்லாத காரணத்தால், நமது தேசியக்கொடி-யை பார்த்து வீரமாக, கர்வமாக மரியாதையோடு அடிக்கும் சல்யூட் ஒன்றை சமர்ப்பிக்கிறேன் அதே உணர்வோடு.
ராஜாவை காபாற்றினால் சதுரங்கத்தில் வெல்லலாம்,
நீங்கள் ஒருவர் இருந்தால் உலக அரங்கத்தில் வெல்லலாம்.

8 comments:

  1. எம்பூட்டு நாள்

    ReplyDelete
  2. @ chinna malai

    வாங்க சகோ, நலமாக உள்ளீரா????

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்

    வந்தேன் சகோ.......
    நலமா?

    ReplyDelete
  4. சொன்னா நம்புவீங்களா???

    "நம்ம கவிதைக்கு அர்த்தம் தெரியாம கேட்டாலும் கவிதையின் நாயகி, நாயகன்னு வெளக்கம் கொடுப்பாரே ஒரு பதிவர்.... யாரு அவரு! பேரு மறந்து போச்சு! யாரா இருக்கும்? அவரா? ச்ச ச்ச... இல்ல அவரா.... ச்ச இல்ல... பின்ன யாரு"ன்னு பஸ்ஸுல பொலம்பிட்டே வந்தேன். கடைசி வரைக்கும் தமிழ்கிழம் பேரு நியாபகத்துக்கு வரவே இல்ல! இன்னைக்கு வந்து பார்த்தா தாத்தோவோட பதிவு! :-)

    ஆமா அவரு நீங்க தானே? இல்ல தப்பான அட்ரஸ்க்கு வந்துட்டேனா???? அவ்வ்வ்வ்வ்

    இதுக்குத்தேன் அடிக்கடி எழுதணூம்னு சொல்றது! இனிமேலாவது ஒழுங்கா அட்டனன்ஸ் போட்டுடுங்கோ :-)

    ReplyDelete
  5. @ ஆமினா
    கண்டிப்பாக நம்புகிறேன் பேத்தியாரே.....
    இனிமேல் முடிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன்......

    ReplyDelete
  6. நான் நலமாக தான் உள்ளேன் நண்பா நீங்கள் தான் எங்கு சென்றீர் என்றே தெரியவில்லை ஏதோ friend contact இருத்தால உங்கள் பதிவை பார்க்க முடிந்தது...அப்போ ரொம்ப தூக்கம் அதான் சின்னதாய் ஒரு கமெண்ட் போட்டு விட்டு போய்டேன் திரும்ப காலையில் போடலாம் என நினைத்தேன் ஆனால் உங்கள் ஞாபகம் இல்லை பார்த்து கொள்ளுங்கள் எந்த நிலைமையில் உள்ளீர் என்று...இனியாவது தொடர்த்து தயவுசெய்து எழுதுங்கள் நம்புறேன் எழுதுவிங்க என்று பார்போம்...

    ReplyDelete
  7. @ chinna malai

    கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே!!!!!!

    ReplyDelete