நீங்கள் படிக்கப்போகும் தகவல் நம்புவதற்கு சற்றே அல்ல மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். பாரீஸ்-இல் உள்ள Eiffel Tower-ஐ 1925-ஆம் ஆண்டில் பிரான்சு அரசாங்கம் பழைய இரும்பிற்கு விற்றது என்றால் யாரால் தான் நம்ப முடியும்.
உண்மையான கதைக்கு போவதற்கு முன்னாள் விக்டர் லஸ்டிக் (Victor Lustig) என்ற மாமனிதர் பற்றிய ஒரு அறிமுகம். அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறுவதற்கு பதிலாக, மற்றவர்களை முட்டாளாக்க கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் என்றால் அது மிகையாகாது. அவர் நாவில் சரஸ்வதி தாண்டவமாடினாளா என்றெல்லாம் எனக்குத்தெரியது ஆனால் அவர் அந்த நாவால் யாரையும் முட்டாளாக்கி விடுவார் என்று நன்றாகவே தெரியும்.
விக்டர் 1890-இல் போமியா(Bohemia) என்ற இடத்தில் பிறந்தார், பின்னர் பாரிஸ்-இற்கு குடிபெயர்ந்தார். முதலில் அவர் அட்லாண்டிக் பகுதிகளில் கள்ள நோட்டு இயந்திரம் என்று கூறி சில இயந்திரங்களை விற்றார். அதில் இரண்டு 100$ நோட்டுகள் மட்டுமே இருக்கும், அதன்பின் அது வெறும் தாளையே வெளியிடும். வாங்கியவர்களுக்கு அது தெரியும் முன்னர் அவர்கள் பணத்தை (சுமார் 30000$) சுருட்டிக்கொண்டு ஓடி விடுவார்.
1925-இல் பிரான்சு அரசு போரின் தாக்கத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது,Eiffel Tower-ஐ பாரமிப்பது மிகவும் கடினமான தேவையற்ற செயல் என்று நாளேடுகளில் விக்டர் படித்தார். அதை படித்தவுடன் மிகச்சிறந்த திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி 6 பழைய இரும்புக்காரர்களை இரகசியமாக ஒரு விடுதிக்கு வரவழைத்தார், தன்னைஅரசாங்கத்தில்Ministry of Posts and telegraph-இன் அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.Eiffel Tower-ஐ பராமரிக்க அரசால் நிதி ஒதுக்க முடியாது என்றும்,அதனால் அதனை விற்கபோவதாகவும் கூறினார். மேலும் இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் பெரிய கிளர்ச்சி ஏற்படுமென்று கூறி அந்த சந்திப்பை ரகசியமாக வைக்க வலியுறுத்தினார்.
அதன் பின்னர் அவர்களைEiffel Tower-க்கு அழைத்து சென்று சுத்தி காட்டினார். அவர் பேச்சால் மயங்கிய Andre Possion என்பவர் Eiffel Tower வாங்குவது சட்டபூர்வமான ஒன்று என்று நம்பி விக்டரிடம் பணத்தை கொடுத்தார். தான் ஏமாற்றபட்டோம் என்று உணர்ந்தபோது அவர் அதனை வெளியே சொல்ல வெட்கப்பட்டு யாரிடமும் கூறவில்லை. இதுதான் விக்டர் Eiffel Tower-ஐ முதன்முறை விற்ற கதை.
Victor Lustig-இன் ஏமாற்று வேலை இதனோடு முடிந்து விடவில்லை. மேலும் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் பின்னூட்டத்தில் கூறவும், இரண்டாம் பாகம் வெளிவரும் (நீங்கள் விரும்பினால் மட்டுமே).
தம்பி..... நம்பமுடியல...
ReplyDeleteஆனாலும் செகன்ட் பார்ட் மீ வெயிட்டிங்.
@ தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteநன்றி அண்ணே.......
அண்ணே அடுதவங்க தகவல வச்சே பேர் வாங்கிய கூகுல் கிட்டயே கேட்டு பாருங்க..... அது சொல்லும் உண்மைய.......
அப்படியா ? அடுத்த பதிவை தொடருங்கள்... என்னவென்று தெரிந்து கொள்வோம்.
ReplyDeletei wait for next post brother
ReplyDeleteபெரிய ஆளா இருப்பார் போல இவ்வளவு செய்தும் எவனும் கண்டுபிடிகலையா...
ReplyDelete10 வருடங்களில் கணிபொறியில் ஏற்படும் மாற்றங்கள்
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete@ ravin singh
விரைவில் சகோதரர்களே............
@ chinna malai
ReplyDeleteஅந்த கதை பாகம்-2 இல்.......