Monday, October 31, 2011

5 நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் நண்பர்களே

,
அன்பான கணவன் 


ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..

" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

TO ----------என் அன்பான மனைவி

SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..

TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

அன்பே..

அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.

உன் வரவை எதிர் நோக்கி..

உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




மொக்கை சொர்க்கத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

வாழ்க்கையில் ஒரு நல்ல காரியமாவது செய்தவர்களுக்கே இந்த வாயில் திறக்கும் என்று காவலன் கூற, காத்திருந்தவர்கள் அனைவரும் ஒரு நன்மை சம்பவ்த்தைச் சொல்லி உள்ளே நுழைந்தனர். இறுதியாக நம் மொக்கையின் முறை..

நான் புறநகர்ப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, 6 தடியர்கள் ஒரு இளம்பெண்ணைக் கடத்திவந்து வம்பு செய்வதைப் பார்த்தேன். வண்டியை நிறுத்திவிட்டு, சாலையில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தேன். அவர்களில் தலைவன் போன்ற ஒருவன் இருந்தான்.. ஆறரை அடி உயரம்.. வெயிட் லிப்ட்டர் போல இருந்தான். புருவத்துல ஒரு வளையம் மாட்டி இருந்தான். முகத்தில் வெட்டுக்காயம் வேறு.. அவன்பிடியில்தான் அந்தப்பெண் தவித்துக்கொண்டிருந்தாள்..

நான் போய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.. மற்றவர்கள் என்னை ரவுண்டு கட்டினார்கள். நான் அஞ்சவேயில்லை. அவன் புருவ வளையத்தைப் பிடுங்கிப் போட்டேன். உருட்டுக்கட்டையால் அவன் தலையில் 4 போடு போட்டேன்.. மற்றவர்களைப்பார்த்து மிரட்டினேன்..

"ஒழுங்கா ஓடிப்போயிருங்க.. இல்லே இவன்கதிதான் உங்களுக்கும்..!

திருப்தியுற்ற சொர்க்க வாயிலோன் கேட்டான்..

அடடே.. நல்ல வேலை செஞ்சிருக்கீங்க.. சரி.. அந்தச் சம்பவம் எப்போ நடந்துச்சு..?

இப்போதான்.. 3 நிமிஷத்துக்கு முந்தி..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இப்ப சிரிக்காம இருங்க பார்க்கலாம்



அந்த ஊரில் பிரபல சர்க்கஸ் ஒன்று முகாமிட்டது.

கூடாரங்களை நிர்மாணிக்கும் வேலைக்கு உள்ளூர் ஆட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உள்ளூர் ஆட்களில் நம் மொக்கையும், பாணியும் இருந்தனர்.

தரையில் பெரும் முளைகளை அடித்து, அவற்றில் கூடாரக் கயிறுகளை இழுத்துக்கட்டும் பொறுப்பு மொக்கை, பாணி இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. சர்க்கஸ் முதலாளி வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று மேற்பார்வையிட்டு சுற்றிவந்தார்.

ஒரு இடத்தில், மொக்கை மட்டும் வேலை செய்யாமல், சர்க்கஸ் வீரர்களைப் போல பல்டி அடிப்பதும், ஒற்றைக்காலில் நின்றபடி பேலன்ஸ் செய்து உடலை வளைப்பதுமாக செய்துகொண்டிருந்தார்.

மொக்கையின் இத்திறமையால் பெரிதும் கவரப்பட்ட சர்க்கஸ் முதலாளி, அவரை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பினார். அவரது நண்பனான பாணியிடம் விசாரித்தார்..

உன் நண்பனா அவன்..? அவனிடம் உள்ள திறமைக்கு எங்கள் கம்பெனியில் சேர்ந்தால் ஒரு காட்சிக்கு 200 ரூபாய் தருவேன். ஒருநாளில் 3 காட்சிகள் கூட நடக்கும். கொஞ்சம் கேட்டுச் சொல்கிறாயா..?

ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.. "எலே மொக்கை.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நச்சுக்கிக்கிறியாலே..?!!!!

நன்றி : http://www.livingextra.com

22 comments to “5 நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் நண்பர்களே”

  • October 31, 2011 at 3:37 AM

    ஆம், நீங்கள் உத்தரவாதம் தந்தது போல் மனம் விட்டுச் சிரித்தேன். பிரமாதம்!

    delete
  • October 31, 2011 at 3:49 AM

    @கணேஷ்
    நன்றி சகோதரரே, அந்த பெருமை livingextra.com-க்கு சேரட்டும்..

    delete
  • October 31, 2011 at 5:18 AM

    Nalla Irku.............!

    delete
  • October 31, 2011 at 11:56 AM

    @Vijayakumar A

    நன்றி நண்பரே.

    delete
  • October 31, 2011 at 7:15 PM

    haa,,,haa,,,haa,,,

    nice sir

    delete
  • November 1, 2011 at 5:52 AM
    Admin says:

    hahahahaha.. good jokes..

    delete
  • November 1, 2011 at 6:04 AM

    @ஆமினா

    @Abdul Basith

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பர்களே..

    delete
  • November 2, 2011 at 3:14 AM

    நண்பா சூப்பர் இன்னும் சில ஜோக் சொல்லுங்க...

    delete
  • November 2, 2011 at 3:33 AM

    @ R.CHINNAMALAI

    நன்றி நண்பரே...

    delete
  • November 2, 2011 at 3:48 AM
    Kousalya Raj says:

    interesting... :))

    நகைசுவை தொடர வாழ்த்துக்கள் !

    delete
  • November 2, 2011 at 4:26 AM

    முதல் வருகை நண்பரே..

    நண்பர் பலேபிரபு வலைப்பூ மூலம்

    மனம் விட்டுச் சிரித்தேன்

    தொடருங்கள்...தொடர்கிறேன்

    நட்புடன்
    சம்பத்குமார்

    delete
  • November 2, 2011 at 4:35 AM

    சூப்பருங்க பாஸ்,,,,,,

    delete
  • November 2, 2011 at 5:03 AM

    Ha ha ha bro. Sema Fun. Need More like this. Add Follow By Email Gadget.

    delete
  • November 2, 2011 at 5:07 AM

    @ Kousalya

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ...

    @சம்பத் குமார்

    @சண்முகம்

    மிக்க நன்றி நண்பர்களே...

    delete
  • November 2, 2011 at 5:12 AM

    @Prabu Krishna

    நன்றி சகோ..

    //Ha ha ha bro. Sema Fun. Need More like this. Add Follow By Email Gadget.//

    சேர்த்தேன் சகோ....

    delete
  • November 4, 2011 at 4:10 AM
    Muthiah C says:

    supero super. Thank u

    delete
  • November 4, 2011 at 6:39 AM

    @ Muthiah C

    நன்றி சகோ.....

    delete
  • November 21, 2011 at 7:25 AM
    Anonymous says:

    அருமை ...

    delete
  • November 21, 2011 at 7:45 AM

    @ !. கருடன் !

    நன்றி நண்பரே..

    delete
  • December 17, 2011 at 6:53 AM

    @ thariq ahamed

    மிக்க நன்றி நண்பரே....

    delete
  • January 13, 2012 at 1:03 PM
    poda beans says:

    your writings are unique

    delete
  • January 17, 2012 at 11:23 PM

    @vin

    மிக்க நன்றி நண்பரே....

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011