
இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது வெகு சுலபமாகிவிட்டது. அவ்வாறு செல்லும்போது தங்கள் உடைமைகளுடன் சான்றிதழ்களையும் சேர்த்தே கொண்டு செல்வர். அவ்வாறு போகும்போது சான்றிதழ்களை தவற விட்ட கதைகள் பல உண்டு. என்னுடைய உறவினர் ஒருவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி தரவிட்டதால் இராணுவத்திற்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
அப்படி ஒரு இப்பூவுலகில் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனாலும் அப்படி ஒரு நிலை வந்தாலும் உங்கள் சான்றிதழ்கள் உங்களிடமே வந்து சேர்வதற்க்கு ஆவண செய்து வைப்பதை பற்றி இன்று பார்ப்போம்.
வேலை தேடி செல்லும்பொழுது உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்லாது இருப்பது மிகவும் நலம். அதையும் மீறி எடுத்து செல்ல வேண்டும் என்றால் சான்றிதழ்கள்...