Friday, December 30, 2011

அனானி பின்னூட்டம்

,
அந்த காவல்துறை அதிகாரியின் வலைப்பூவில் யார் அசிங்கமாக அனானி பின்னூட்டம் இட்டது என்று அந்த காவல் நிலையமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. சைபர் க்ரைம் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருந்தது. கூடுதல் ஆணையர் திலீப் என்றால் ஆணையரே கொஞ்சம் யோசித்து தான் பேசுவார். சென்ற முறை ரௌடிகளை வேட்டையாட சென்ற போது பேரம் பேசியதற்காக பழைய ஆணையரின் நெற்றிபொட்டிலில் போட்டு தள்ளிவிட்டு ரௌடி சுட்டான் என்று கணக்கு முடித்ததாக பரவலாக பேசிக்கொண்டார்கள் (ஆனால் சாட்சி இல்லை). ஐ.பி முகவரியை வைத்து பிடிக்கலாமென்றால் அது அனானி பின்னூட்டம். அப்பொழுது தான் திலீபிற்கு அந்த யோசனை தோன்றியது. stats கவுண்ட்டரை ஹாக் செய்து அந்த தளத்தில் எந்த ஐ.பி முகவரியிலிருந்து அதிக நேரம் இருந்துள்ளார்கள் என்பதை பார்த்து அந்த பின்னூட்டத்திற்கான ஆளை...
மேலும் படிக்க...

Wednesday, December 28, 2011

உடற்பயிற்சி

,
அவர்கள் இருந்த காம்பௌண்டில் அவனையும் சேர்த்து 30 பாச்ளர்கள். அந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே உடற்பயிற்சி நிலையம் இல்லை, ராமனுக்கோ  உடற்பயிற்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. மாடியில் சென்று பயிற்சி செய்யலமென்றால் அதற்கு செல்லும் வழியை வீட்டுக்காரர் பூட்டு போட்டு வைத்துவிட்டார். பொறுத்தது போதுமென்று ஒரு முடிவிற்கு வந்தவனாக மாடிக்கு குழாய் வழியாக எறிச்சென்று ஓனருக்கு தெரியாமல் ஒரு கயிறு கட்டி விட்டான். அடுத்த நாளிலிருந்து அந்த கயிற்றை பிடித்து மேல் மாடிக்கு சென்று திரும்பினான். ஒரு சனிக்கிழமையன்று அவன் நண்பன் கனகு-வும் வருவதாக கூறினான். சரியென்று அவனை பத்திரமாக ஏற சொல்லிவிட்டு தானும் சென்றான். மேலே கனகு கோபமாக நின்றிருந்தான், அங்கே மொட்டை மாடி பேருக்கேற்றார் போல் மொட்டையாக இருந்தது,...
மேலும் படிக்க...

Saturday, December 17, 2011

டைம் மெஷின்

,
20 வருட ஆராய்ச்சிக்குப்பின் அந்த டைம் மெஷினை professor  திலீப் அவர்கள் வடிவமைத்து முடித்திருந்தார். சந்தோசத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்தார், பின்னே சும்மாவா டைம் மெஷினை முடிக்கும் வரை தன சொந்த மகளையே பார்ப்பதில்லை என்று ஆராய்ச்சி கூடத்திலே கழித்தாயிற்று. வீட்டிற்கு போவதற்கு முன் சக விஞ்ஞானிகளிடம் பாராட்டு வாங்குவதற்கு காத்திருந்தார். ஆயிற்று, அவர்களும் வந்தாயிற்று ஆனால் சொதப்பி விட்டதே. எப்படி வேலைக்காரன் முருகன் டீசல் வாங்கி வைக்க மறந்தான். பவர் கட் நேரத்தில் அநியாயமாக ஜெனெரேட்டர் வைத்து கூட ஒட்டி காண்பிக்க முடியவில்லையே. இந்த பங்க்-காரர்கள் வேறு 6 மாதமாக ஸ்டிரைக்-இல் உள்ளனர். பின்னே 2011-இல் ரூ.44.54 பைசாவாக இருந்த டீசல் 50 வருடத்திற்குள் 4454 ரூபாயாக உயர்ந்ததிற்கு பங்க்-ஐ...
மேலும் படிக்க...

Monday, December 12, 2011

ஹிப்னாட்டிசம்

,
அவன் பெயர் ரமேஷ், அந்த ஹிப்னாட்டிச கல்லூரியில் சேர்ந்து 6 மாதம் ஆகிவிட்டது, அந்த ஆறு மாதத்தில் ஏதோ கொஞ்சம் கற்று வைத்திருந்தான். அன்று வழக்கம் போல் தனது நண்பன் அப்துலிடம் கல்லூரி போர்டிகோவில் நின்று பேசிக்கொண்டிருந்தான், அப்பொழுதான் அந்த பெண்ணை பார்த்தான். அழகு என்றாள் அப்படி ஒரு அழகு. உடனே தன் நண்பனிடம் சவால் விட்டான், இப்பொழுது பார் என்னுடைய ஹிப்னாட்டிசத்தை வைத்து அவளிடம் ஒரு முத்தம் வாங்குகிறேன் என்று. இருந்தாலும் அப்துல் அவனை வேண்டாமென்று எச்சரித்தான். அவனாவது கேட்ப்பதாவது, தன்னுடைய கவனத்தை அந்த பெண்ணின் கண்களை நோக்கி குவித்து விட்டிருந்தான். திடீரென்று அவன் தன்னை பற்றிய விவரங்களை சொல்ல துவங்கி இருந்தான். என் பெயர் ரமேஷ், முதலாம் ஆண்டு ஹிப்னாட்டிசம் படிக்கிறேன், பூந்தமல்லியில்...
மேலும் படிக்க...

Wednesday, December 7, 2011

அரிய படங்களின் தொகுப்பு-1

,
A.P.J.அப்துல் கலாம் காந்தி கோட்சே மன்மோகன்,சோனியா.ராஜபக்சே மற்றும் பலர...
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011