
நேற்று Eiffel Tower-அ விக்டர் லஸ்டிக்முதல் முறை விற்ற கதையை பார்த்தோம். இன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் மீதத்தை பார்ப்போம்.
சென்ற முறை Eiffel Tower-ஐ விற்ற போது எதும் பிரச்சனை வராமல் போகவே, மீண்டும் ஒரு மாதம் கழித்து பாரிஸ் வந்த விக்டர் வேறு 6 பழைய இரும்புக்காரர்களை (Scrap Dealers) வரவழைத்து பேரம் பேசினார். ஆனால் இந்த முறை காவல்துறைக்கு தகவல் கசிந்ததுவிட்டது. இருப்பினும் லஸ்டிக் தப்பிவிட்டார்.
தனது 30 வயதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தேடபட்ட முக்கிய குற்றவாளியாக இருந்த போது விக்டர் அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். அமெரிக்க அரசால் மிகவும் முக்கியமான, வேண்டப்பட்ட குற்றவாளி (Count) என்று செல்லமாக (அல்லது பகிரங்கமாக) அழைக்கப்பட்டார். அந்த சயமத்தில் Al Capone...