Wednesday, May 28, 2014

Article 370-ஐ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

,
 • ஜம்மு&காஷ்மீர் வாசிகள் இரட்டை குடியுரிமையும் அவர்கள் சொந்த தேசிய கொடியும் கொண்டுள்ளார்கள்.
 • மற்ற மாநிலங்களின் ஆட்சி காலம் 5 வருடம் ஆனால் ஜம்மு&காஷ்மீர் பாராளமன்றத்தின் அகவை 6 வருட காலம்.
 • இந்திய கொடியையோ அல்லது மற்ற தேசிய சின்னங்களையோ அவமரியாதை செய்வது ஜம்மு&காஷ்மீரில் குற்றமல்ல.
 • உச்ச நீதிமன்றத்திற்கு ஜம்மு&காஷ்மீரில் எந்த அதிகாரமும் இல்லை.
 • இந்திய அரசாங்கத்தால் ஒருசில விசயங்களில் (ராணுவம் மாதிரி) மற்றுமே அதிகாரம் செலுத்த முடியும். மற்றவை ஜம்மு&காஷ்மீர் அரசிடம்.
 • ஒரு இந்திய குடிமகனையோ அல்லது குடிமகளையோ திருமணம் செய்தால் ஜம்மு&காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும்.
 • ஒரு பாகிஸ்தானி ஜம்மு&காஷ்மீர் வாசியை திருமணம் செய்தால் அவருக்கு ஜம்மு&காஷ்மீர் குடியுரிமை வழங்கப்படும்.
 • RTI, RTE, CAG மற்றும் பெரும்பாலான சட்டங்கள் ஜம்மு&காஷ்மீரில் செல்லுபடியாகது.
 • காஷ்மீர் தங்களது மக்கள் மீது ஷரியா சட்டத்தை திணிக்கிறது, குறிப்பாக பெண்கள் மீது.
 • பஞ்சாயத்து முறை காஷ்மீரில் கிடையாது.
 • இந்துக்களும் சீக்கியர்களும் அங்கு சிறுபான்மையினர் ஆனாலும் அவர்களுக்கு 16% இட ஒதுக்கீடு கிடையாது.
 • இந்த 370 article இன் படி எந்த ஒரு வெளியாட்களும் (இந்தியர்கள்) ஜம்மு&காஷ்மீரில் நிலமோ வீடோ வாங்க முடியாது..
மேலே குறிப்பிட்டுள்ளவை சுப்ரமணிய சுவாமியின் பக்கத்தில் இருந்து எடுத்ததன் தமிழாக்கம்....
மேலும் படிக்க...

Friday, September 21, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வேண்டுமா?

,
என்னடா இவன் கூடங்குளம் இவ்வளவு பிரச்சனையில் இருக்கும்போது வேலையைப்பற்றி கேட்கிறானே என்று கோபம் கொள்ள வேண்டாம். பிடித்தவர்கள் வரட்டும், பிடிக்காதவர்கள் விட்டுவிடுங்கள். நாட்டின் ஒரு பிரச்சனையை மட்டும் பார்த்தால் போதுமா? வேலையில்லா திண்டாட்டத்தையும் பார்க்க வேண்டாமா?

தற்போது keltron-இன் கீழ் காண்ட்ராக்ட் மூலமாக வேலை செய்ய டிப்ளோமா (ECE) முடித்தவர்கள் மற்றும் ITI முடித்தவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள். நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இருந்தால் கண்டிப்பாக சொல்லவும். கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி-யில் இருந்து மட்டும் அப்ளிகேஷன் வரவேற்கப்படுகிறது.

Name of the post :
Instrument Technician,
Education required :
DECE or ITI (must be 2010 passed outs or Before ) [Engineering passed outs with diploma qualification can also apply if you wish]
Salary :
Best in the industry  (+OT)
Allowances :
Accommodation provided + Free travel
Contact :
Mr.Ajay k.Nair
9043879757
Email : pie.kollam@gmail.com (Send your bio-data to this mail address)
மேலும் படிக்க...

Saturday, July 14, 2012

சூரியனை பார்த்து குரைக்கும் நாய்

,
கவிதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு (ஏங்க..... ஏங்க ........ ஓடாதீங்க சும்மா சின்ன கவிதை தான்)

நீ சூரியனாக இருந்தால்
குறைக்கும் நாயே தண்ணீர்குடியென்பாய்
வெறும் பிம்பமாக இருந்தால்
உன்னைக்குடித்து ஏப்பம்விடும் நாய்.

இந்த கவிதை கூறும் கருத்து போல உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே வாழ்கையில் வெற்றி நிச்சயம். மாறாக அவர்கள் பேச்சுக்கு செவி சாய்த்து விட்டால் போச்சு, அவ்வளோதான் அவர்கள் கும்பலில் உங்களையும் சேர்த்து விடுவார்கள்.

மேலும் படிக்க...

Monday, July 2, 2012

சமூக வலைத்தளங்களில் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு

,
உறவுகள் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட தேவைகளுள் ஒன்றாகவே ஆகிவிட்டது, அது மற்றவர்களுடன் பழகுவது மூலமே சாத்தியப்படும். அது ஒன்று மட்டுமே மிருகங்களிலிருந்து நம்மை வேறுபட செய்கின்றன. அதிகரித்த சமூக ஊடகங்கங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்கள் பழகும் முறையையே மாற்றிவிட்டன. இன்று, சமூக ஊடகங்கள், புவியியல் மற்றும் மொழி போன்ற ஒவ்வொரு தடைகளையும் நீக்கி கோடிக்கணக்கான மக்கள் சாத்தியமான வகையில் கல்வி கற்க, வணிகங்கள் நடத்தப்படும் முறையை மாற்றி, உண்மையை மற்றும் உணர்ச்சிகளை பரப்பும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக, ஒன்றாக மனித இனத்தை இணைக்கும் ஒரு புரட்சிகர கருவியாக மாறிவிட்டது. சந்தேகமே இல்லாமல் வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர்கள், பெருநிறுவன அமைப்புக்கள், நிறுவனங்கள் சமூக ஊடகங்களுடன் கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும். வணிக விளம்பரங்கள், நட்பு தொடங்கி ஒரு வீட்டின் வேலைக்காரியை தேர்ந்தெடுப்பது முதல் திருமண பரிந்துரைகள் வரை சமூக ஊடகத்தினுடைய சேவையின் தேவை இன்று உள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுள் ஒன்றாக சமூக ஊடகங்களை இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இன்று நாம் ஒரு சமூக வலைதளங்கள் அல்லது கருத்துக்களங்களில்(forums) பங்கு பெறாமல் வாழும் வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது, இதுவே சமூக ஊட்கங்களின் தாக்கம் ஆகும். மற்றும் ஆன்லைன் வெளியீட்டாளர்கள், வலைப்பதிவாளர்கள், சந்தைப்படுத்துவோர், மக்கள் தொடர்பு அதிகாரிகள், செய்தி நிறுவனங்கள், விளம்பரதாரர்கள், அனைத்து துறைகளில் வல்லுநர், வேலை வேலைவழங்குன்ர்கள்,மக்களை தேடுவோர், தனித்து வேலை செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் (Freelancers), தொழில் முனைவோர், நிகழ்வு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், வாழ்வின் அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களால் பயனடைகின்றனர்.

இந்திய சமூக ஊடக விளம்பரத்தில் 7 வது மிகப்பெரிய சந்தை என்றாலும், சமூக ஊடகங்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, இந்திய மக்கள் தொகையில் வெறும் 4சதவீகத்திற்கும் குறைவாக உள்ளனர். 200 + இந்திய பிராண்டுகள் மட்டுமே சமூக ஊடகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் $230 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உலகம் முழுவதும் சமூக நெட்வொர்க்குகள் வழியாக தற்போது விற்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை 2015 க்குள் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளின் `100 பில்லியன் கடக்க கூடும் இந்தியாவின் பங்குகளினால் சுமார் $ 1.35 டிரில்லியன் ஆக பெருக வாய்ப்பு உள்ளது. பிரபல சமூக வலைதளம் முகநூல்(Facebook) இந்தியாவில் பயனர் எண்ணிக்கை அடிப்படையில் அதனை No.1 சந்தையாக மாற்ற எதிர்பார்த்து வருகிறது. இந்தியா 2015-இல் உலகின் முதல் 10 e-வர்த்தக மையங்களுள் ஒன்றாக இருக்கும். ஆன்லைன் பயனர் எண்ணிக்கை இப்போது 8-10 மில்லியனுக்கு எதிராக 2015 க்குள் 39 மில்லியன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையற்ற வாய்ப்புகளை மற்றும் எல்லையில்லாத சாத்தியக்கூறுகள் கொண்ட, சமூக ஊடக புரட்சி தான் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 3 சதவீகத்திற்கும் குறைவானோர் ஆன்லைன் பயன்படுத்தும்போது மற்றும் 97 சதவீகத்தினர் இன்னும் உள்ளே வரவிருப்பதினால், 2015-இல் இந்திய சமூக நெட்வொர்க்கிங்-ஆல் ஒவ்வொரு நாளில் 5 கோடி பார்வையாளர்கள் கொண்ட e-வர்த்தகம் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் `53000 கோடி ஆகும். ஒரு சிட்டிகை அளவுகூட சந்தேகம் இல்லாமல் இந்தியாவை விட பெரிய சந்தை இல்லை என்று கூறலாம், இதனால் நிச்சயமாக நாம் சமூக ஊடகங்களில் செய்யும் முதலீடு அதிக வருமானத்தை திருப்பி கொடுக்கும்.

சமூக ஊடகங்கள் இணையத்தில் வெடித்து பரவுகிறது மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஆன்லைன் சமூக வலையமைப்புகளில் கலந்துக்கொள்கிறார்கள். இது ஆச்சரியமான வாய்ப்புகளை உருவாக்கி வீட்டிலுருந்தே இணைய வர்த்தகங்களை பயன்படுத்தி கொள்ள உதவி வருகிறது. இது உங்கள் தரமான நேரத்தை எங்கு கழிக்க வேண்டும் மற்றும் அதன் பயன் எங்கே என்று தெரிந்து கொள்ள உதவுகிறது! இந்த உலகளாவிய வலையில் (World Wide Web), இந்த சமூக ஊடக புரட்சியில் நீங்கள் கலந்துகொள்ள மற்றும் நிலைநிறுத்த இதுதான் சரியான நேரம். சரியான இணைப்பு கருவிகள் தெரிந்துகொள்வதும், திறமையாக பயன்படுத்துவதும் உங்கள் விலையுயர்ந்த நேரத்தை சேமித்து மற்றும் உங்கள் இலக்கை எட்ட உதவும். ஆனால் இந்த தெரிந்துகொள்ள நீங்கள் மக்களிடம் இருந்து தந்திரங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் Lifemitra Academy For Learning & Development –இன் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது.

Lifemitra (Leaders India Foundation for Excellence) Academy for Learning and Development  உயர் தரமான சுய மேம்பாடு மற்றும் நிதி பயிற்சி மூலமும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் முழு தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி வழங்குவதன் மூலமும் நமது கல்வி முறை மற்றும் சமூக உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, Lifemitra அனைத்து பொருத்தமான ஆன்லைன் மார்க்கெட்டிங் கருவிகள் மற்றும் உங்கள் வீட்டில் இருந்து சம்பாதிக்க உதவும் முறைகள் உங்களுக்கு சித்தப்படுத்துவதற்காக அதன் முதல் பிரீமியம் ஆன்லைன் திட்டம் மூலமாக சமூக ஊடக மேலாளர் (Certified Executive Social Media Manager)கோர்ஸ்-ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

கோர்ஸ்-இன் சிறப்பம்சங்கள்
ஆன்லைன் மூலம் எல்லையில்லாத வருமானம் ஈட்ட ஒரு பொன்னான வாய்ப்பு.
ஒரு கணினி மற்றும் இணைய இணைப்புடன் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள்
தகுதி அல்லது முன் அனுபவம் தேவை இல்லை,
 •இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்திருந்தால் மட்டும் போதும்.
தகுதியுடைய ஆட்களுக்கு  100% வேலை உதவி.
கோர்ஸ்-க்கு பின் இணையத்தில் நிறைய சாதிக்கலாம்.
துறையில் அனுபவம் வாய்ந்த பிரத்தியேக நிபுணர்கள் குழு மூலம் வடிவமைக்கப்பட்ட யுக்திகள்,
எளிய, நிரூபிக்கப்பட்ட, மதிப்பெண் சார்ந்த  உங்கள் எளிதாக புரிவிக்கும் பொருட்டு மிகவும் ஊடாடும்(highly interactive) பாட திட்டங்கள்.
உங்கள் முன்னேற்றத்தை அளவிட சுலபமான மதிப்பீட்டு முறைகள் (பல்வேறு விருப்ப கேள்விகள், உண்மை அல்லது பொய் கண்டுபிடிக்க, வினாடிவினா பின்வரும் பொருந்தும்).
கோர்ஸ் கட்டணம் $ 100 (`5000/-), 2012, ஜூலை 31-க்குள் முன் பதிவு செய்து 50% வரை சேமியுங்கள்.
பாதுப்பான ஆன்லைன் பரிமாற்றதிற்கு எங்கள் gateway www.lifemitra.com -ஐ பயன்படுத்தவும்,
உலகின் எந்த பகுதியில் இருந்தும் கற்கலாம்.
உங்கள் முதலீடிற்கு உத்தரவாதம் மற்றும் பெரும் மதிப்பு.
   சீக்கிரம் முன்வந்து அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்...!
   மேலும் விபரங்களுக்கு: jayachandran.lifemitra@gmail.com அல்லது +91-9
387574583 இவ்வளவும் கவனமா படிச்சிட்டு வந்த நம்ம ஆளுங்க கோர்ஸ் கட்டணம் வந்ததும் முகத்த சுழிப்பாங்க-னு எனக்கு நல்லா தெரியும். அவங்க கூரைய பிச்சிக்கிட்டு ஏதாவது வரும்-னு எதிர்பார்க்கர கோஷ்டிங்க. அவங்களுக்கு ஒரு கேள்வி, ஏங்க `300,000 செலவு பண்ணி பொறியியல் படிச்சவுனுக்கே `5000 சம்பளத்துல வேலை கிடைக்கறது குதிர கொம்பா இருக்கும்போது, காசே செலவு பண்ணாம சம்பாதிக்கணும்னா எப்படிங்க?
ஒரு தடவ முயற்சி பண்ணித்தான் பாருங்களேன்..
நாம் ஆன்லைனில் பயிற்சி (சான்றளிக்கப்பட்ட நிர்வாக சமூக ஊடக மேலாளர் [Certified Executive Social media Manager]) இந்த மாதம் முதல் அறிமுக படுத்தப்படும்..

கொசுறு: இந்த கோர்ஸ் நடத்தும் நண்பர்களின் (மேலும் இந்தியாவின் முதல் சமூக தளம்) சமூக வலைதளத்தில் இணைய இந்த லிங்க்-இல் செல்லவும்..
மேலும் படிக்க...

Tuesday, June 19, 2012

என்ன? ஐ‌பில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை) பாகம்-2

,
நேற்று Eiffel Tower-அ விக்டர் லஸ்டிக்முதல் முறை விற்ற கதையை பார்த்தோம். இன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் மீதத்தை பார்ப்போம்.


சென்ற முறை Eiffel Tower-ஐ விற்ற போது எதும் பிரச்சனை வராமல் போகவே, மீண்டும் ஒரு மாதம் கழித்து பாரிஸ் வந்த விக்டர் வேறு 6 பழைய இரும்புக்காரர்களை (Scrap Dealers) வரவழைத்து பேரம் பேசினார். ஆனால் இந்த முறை காவல்துறைக்கு தகவல் கசிந்ததுவிட்டது. இருப்பினும் லஸ்டிக் தப்பிவிட்டார்.

தனது 30 வயதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தேடபட்ட முக்கிய குற்றவாளியாக இருந்த போது விக்டர் அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். அமெரிக்க அரசால் மிகவும் முக்கியமான, வேண்டப்பட்ட குற்றவாளி (Count) என்று செல்லமாக (அல்லது பகிரங்கமாக) அழைக்கப்பட்டார். அந்த சயமத்தில் Al Capone என்ற நிழலுலக தாதா-விடம் சென்று தனது அடுத்த ஏமாற்று வேலைக்காக $50000 முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 60 நாட்களில் இரட்டிப்பு பணத்தை தருவதாக வாக்களித்தார். 

அந்த Al Capone தடியனை மற்றவர்களைப்போல ஏமாற்றினால் தனது எலும்பை எண்ணிவிடுவான் என்பது நமது நாயகனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. அதனால் அந்த பணத்தை பத்திரமாக லாக்கரில் வைத்துவிட்டு 60 நாட்கள் கழித்து தாதா-விடம் வந்து டீல் படுத்துவிட்டது என்று கூறினார். தாதா அவரின் எலும்பை முறிப்பதற்கு முன்னர் அவரின் பணத்தை அப்படியே ஒப்படைத்தார். அவரின் உன்னதனமான குணத்தை பாராட்டி Al Capone விக்டர்-க்கு (அவர் எதிர்பார்த்தபடி) $5000 பரிசாக அளித்தார்.

இத்துனை இமாலய சாதனைகள் புரிந்த நமது விக்டர் லஸ்டிக் (Victor Lustig) 1934-ஆம் ஆண்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டுசெல்லவேண்டிய ஒரு நாளைக்கு முன்னர் லஸ்டிக் சிறையிலிருந்து மிக புத்திசாலித்தனமாக தப்பினார். ஆனாலும் 27 நாட்கள் கழித்து Pittsburgh Pennsylvania-வில் மீண்டும் கைது செய்யப்பட்டார். December 5, 1935-இல் விக்டர் லஸ்டிக் 15-ஆண்டுகள் குற்றதிற்காகவும் 5 ஆண்டுகள் சிறையில் இருந்து தப்பியதற்காகவும் மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். March 9, 1947-இல் pneumonia-வால் தாக்கப்பட்டு 36 மணிநேரம் கழித்து தனது 57-வது வயதில் மரணமடைந்தார்.
மேலும் படிக்க...

Monday, June 18, 2012

என்ன? ஐ‌பில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை))

,
நீங்கள் படிக்கப்போகும் தகவல் நம்புவதற்கு சற்றே அல்ல மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். பாரீஸ்-இல் உள்ள Eiffel Tower-ஐ 1925-ஆம் ஆண்டில் பிரான்சு அரசாங்கம் பழைய இரும்பிற்கு விற்றது என்றால் யாரால் தான் நம்ப முடியும்.

உண்மையான கதைக்கு போவதற்கு முன்னாள் விக்டர் லஸ்டிக் (Victor Lustig) என்ற மாமனிதர் பற்றிய ஒரு அறிமுகம். அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறுவதற்கு பதிலாக, மற்றவர்களை முட்டாளாக்க கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் என்றால் அது மிகையாகாது. அவர் நாவில் சரஸ்வதி தாண்டவமாடினாளா என்றெல்லாம் எனக்குத்தெரியது ஆனால் அவர் அந்த நாவால் யாரையும் முட்டாளாக்கி விடுவார் என்று நன்றாகவே தெரியும்.

விக்டர் 1890-இல் போமியா(Bohemia) என்ற இடத்தில் பிறந்தார், பின்னர் பாரிஸ்-இற்கு குடிபெயர்ந்தார். முதலில் அவர் அட்லாண்டிக் பகுதிகளில் கள்ள நோட்டு இயந்திரம் என்று கூறி சில இயந்திரங்களை விற்றார். அதில் இரண்டு 100$ நோட்டுகள் மட்டுமே இருக்கும், அதன்பின் அது வெறும் தாளையே வெளியிடும். வாங்கியவர்களுக்கு அது தெரியும் முன்னர் அவர்கள் பணத்தை (சுமார் 30000$) சுருட்டிக்கொண்டு ஓடி விடுவார்.

1925-இல் பிரான்சு அரசு போரின் தாக்கத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது,Eiffel Tower-ஐ பாரமிப்பது மிகவும் கடினமான தேவையற்ற செயல் என்று நாளேடுகளில் விக்டர் படித்தார். அதை படித்தவுடன் மிகச்சிறந்த திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி 6 பழைய இரும்புக்காரர்களை இரகசியமாக ஒரு விடுதிக்கு வரவழைத்தார், தன்னைஅரசாங்கத்தில்Ministry of Posts and telegraph-இன் அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.Eiffel Tower-ஐ பராமரிக்க அரசால் நிதி ஒதுக்க முடியாது என்றும்,அதனால் அதனை விற்கபோவதாகவும் கூறினார். மேலும் இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் பெரிய கிளர்ச்சி ஏற்படுமென்று கூறி அந்த சந்திப்பை ரகசியமாக வைக்க வலியுறுத்தினார்.

அதன் பின்னர் அவர்களைEiffel Tower-க்கு அழைத்து சென்று சுத்தி காட்டினார். அவர் பேச்சால் மயங்கிய Andre Possion என்பவர் Eiffel Tower வாங்குவது சட்டபூர்வமான ஒன்று என்று நம்பி விக்டரிடம் பணத்தை கொடுத்தார். தான் ஏமாற்றபட்டோம் என்று உணர்ந்தபோது அவர் அதனை வெளியே சொல்ல வெட்கப்பட்டு யாரிடமும் கூறவில்லை. இதுதான் விக்டர் Eiffel Tower-ஐ முதன்முறை விற்ற கதை.

Victor Lustig-இன் ஏமாற்று வேலை இதனோடு முடிந்து விடவில்லை. மேலும் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் பின்னூட்டத்தில் கூறவும், இரண்டாம் பாகம் வெளிவரும் (நீங்கள் விரும்பினால் மட்டுமே). 
மேலும் படிக்க...

Thursday, May 31, 2012

மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடிய ஆனந்த் அன்பருக்கு வாழ்த்துக்கள்

,
வாசகர்கள் (யாரேனும் இருந்தால்) மன்னிக்கவும் நீண்டகால இடைவெளிக்கு. பலநாட்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நமது தமிழ்கிழம் வலைப்பூ இன்று நமது அன்பர், இந்தியா-வின் மகுடம் தொடர்ந்து ஐந்து முறை பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்காக தூசி தட்டப்பட்டுள்ளது.
சகோதரர் ஆனந்த் அவர்களை வாழ்த்த வயதோ தகுதியோ இல்லாத காரணத்தால், நமது தேசியக்கொடி-யை பார்த்து வீரமாக, கர்வமாக மரியாதையோடு அடிக்கும் சல்யூட் ஒன்றை சமர்ப்பிக்கிறேன் அதே உணர்வோடு.
ராஜாவை காபாற்றினால் சதுரங்கத்தில் வெல்லலாம்,
நீங்கள் ஒருவர் இருந்தால் உலக அரங்கத்தில் வெல்லலாம்.

மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011