Saturday, December 17, 2011

டைம் மெஷின்

,
20 வருட ஆராய்ச்சிக்குப்பின் அந்த டைம் மெஷினை professor  திலீப் அவர்கள் வடிவமைத்து முடித்திருந்தார். சந்தோசத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்தார், பின்னே சும்மாவா டைம் மெஷினை முடிக்கும் வரை தன சொந்த மகளையே பார்ப்பதில்லை என்று ஆராய்ச்சி கூடத்திலே கழித்தாயிற்று.

வீட்டிற்கு போவதற்கு முன் சக விஞ்ஞானிகளிடம் பாராட்டு வாங்குவதற்கு காத்திருந்தார். ஆயிற்று, அவர்களும் வந்தாயிற்று ஆனால் சொதப்பி விட்டதே. எப்படி வேலைக்காரன் முருகன் டீசல் வாங்கி வைக்க மறந்தான். பவர் கட் நேரத்தில் அநியாயமாக ஜெனெரேட்டர் வைத்து கூட ஒட்டி காண்பிக்க முடியவில்லையே. இந்த பங்க்-காரர்கள் வேறு 6 மாதமாக ஸ்டிரைக்-இல் உள்ளனர். பின்னே 2011-இல் ரூ.44.54 பைசாவாக இருந்த டீசல் 50 வருடத்திற்குள் 4454 ரூபாயாக உயர்ந்ததிற்கு பங்க்-ஐ கொளுத்தினால் யார்தான் சும்மா இருப்பார்கள்.

அவர்கள் துப்பிவிட்டு சென்றதை துடைப்பதற்குள் பவர் வந்து விட்டது. சரி நாம் கற்காலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து வந்து நிரூபிப்போம் என்று குத்துமதிப்பாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னே செல்வதற்கு பொத்தானை அழுத்தினார்.

அடுத்த நொடி அவரை நோக்கி அந்த டைனோசர் மூர்க்கத்தனமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

(அதனிடமிருந்து தப்பினாலும் தண்ணீரில் இருந்து மின்சாரம் எடுக்கக்கூட உலோகம்(காயில்) வேண்டும் என்று யோசிக்க கூட அவரிடம் நேரம் இல்லை.)

2 comments to “டைம் மெஷின்”

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011