Friday, December 30, 2011

அனானி பின்னூட்டம்

,
அந்த காவல்துறை அதிகாரியின் வலைப்பூவில் யார் அசிங்கமாக அனானி பின்னூட்டம் இட்டது என்று அந்த காவல் நிலையமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. சைபர் க்ரைம் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருந்தது. கூடுதல் ஆணையர் திலீப் என்றால் ஆணையரே கொஞ்சம் யோசித்து தான் பேசுவார். சென்ற முறை ரௌடிகளை வேட்டையாட சென்ற போது பேரம் பேசியதற்காக பழைய ஆணையரின் நெற்றிபொட்டிலில் போட்டு தள்ளிவிட்டு ரௌடி சுட்டான் என்று கணக்கு முடித்ததாக பரவலாக பேசிக்கொண்டார்கள் (ஆனால் சாட்சி இல்லை).

ஐ.பி முகவரியை வைத்து பிடிக்கலாமென்றால் அது அனானி பின்னூட்டம். அப்பொழுது தான் திலீபிற்கு அந்த யோசனை தோன்றியது. stats கவுண்ட்டரை ஹாக் செய்து அந்த தளத்தில் எந்த ஐ.பி முகவரியிலிருந்து அதிக நேரம் இருந்துள்ளார்கள் என்பதை பார்த்து அந்த பின்னூட்டத்திற்கான ஆளை மடக்கி விட்டார்கள். அனானியின் பெயர் வினோத்.

அனைவரும் திலீபின் கன்னசைவுக்காக காத்திருந்தார்கள். ஆனால் அவரோ எதும் பேசாமல் கலைந்து போக சொல்லிவிட்டார். அதற்கு பின் அந்த அனானிக்கு தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு விட்டுவிட்டார்.

அதன் பின் இரண்டு வாரம் கழித்து ஆய்வாளர் முருகன் அதை பற்றி விசாரித்தார். அதற்கு திலீப் கூறினார், அந்த அனானி வினோத் பொறியியல் பட்டதாரி, படித்து முடித்துவிட்டு ஒரு வருடமாக வேலை தேடிக்கொண்டிருக்கிறான், அவனை பிடித்து உள்ளே போட்டால் வெளி வரும்போது ஒரு பொறுக்கியாகவோ, கடத்தல்காரன் ஆகும் எண்ணத்திலோ தான் வருவான். அது போக அவன் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவன், அதனால் தான் அழைத்து மிரட்டியதோடு விட்டுவிட்டேன் என்றார்.

3 comments to “அனானி பின்னூட்டம்”

  • December 30, 2011 at 9:50 PM

    அனானி கதை நல்லா இருக்கு..
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    delete
  • December 30, 2011 at 10:42 PM

    @ தமிழ்வாசி பிரகாஷ்

    மிக்க நன்றி சகோதரரே...

    தங்களுக்கும் தங்கள் சுற்றத்தார்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்..

    delete
  • June 24, 2012 at 7:10 PM

    அன்பின் தமிழ் கிழம் - கதை நன்று - இரசித்தேன். நல்வாழ்த்துகள் -ந்ட்புடன் சீனா

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011