Wednesday, December 28, 2011

உடற்பயிற்சி

,
அவர்கள் இருந்த காம்பௌண்டில் அவனையும் சேர்த்து 30 பாச்ளர்கள். அந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே உடற்பயிற்சி நிலையம் இல்லை, ராமனுக்கோ  உடற்பயிற்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. மாடியில் சென்று பயிற்சி செய்யலமென்றால் அதற்கு செல்லும் வழியை வீட்டுக்காரர் பூட்டு போட்டு வைத்துவிட்டார்.

பொறுத்தது போதுமென்று ஒரு முடிவிற்கு வந்தவனாக மாடிக்கு குழாய் வழியாக எறிச்சென்று ஓனருக்கு தெரியாமல் ஒரு கயிறு கட்டி விட்டான்.

அடுத்த நாளிலிருந்து அந்த கயிற்றை பிடித்து மேல் மாடிக்கு சென்று திரும்பினான். ஒரு சனிக்கிழமையன்று அவன் நண்பன் கனகு-வும் வருவதாக கூறினான். சரியென்று அவனை பத்திரமாக ஏற சொல்லிவிட்டு தானும் சென்றான்.
மேலே கனகு கோபமாக நின்றிருந்தான், அங்கே மொட்டை மாடி பேருக்கேற்றார் போல் மொட்டையாக இருந்தது, கனகு கோபமாகக் கேட்டான் இங்கே தினமும் வந்து அப்படி என்னதாண்டா செய்வே என்று?

ராமன் கூலாகச் சொன்னான் நண்பா இங்கே வந்து தான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பது இல்லை, இங்கே வருவதே ஒரு உடற்பயிற்சி தான்.


4 comments to “உடற்பயிற்சி”

  • December 28, 2011 at 9:07 PM
    Kousalya Raj says:

    //இங்கே வருவதே ஒரு உடற்பயிற்சி தான்.//

    எது ஒன்றும் இல்லை வருந்துவதை விட மாற்று உபாயம்/வழி என்ன என்று பார்ப்பது புத்திசாலித்தனம்...

    ஒரு பெரிய சிந்தனையை வெகு சுலபமாக சொன்ன விதம் பிடித்தது. மிக ரசித்தேன்.

    :))

    delete
  • December 28, 2011 at 9:41 PM

    ஹா ஹா ஹா அருமை சகோ.

    delete
  • December 28, 2011 at 11:01 PM

    @ Kousalya

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    சகோ.

    delete
  • December 28, 2011 at 11:02 PM

    @ Prabu Krishna

    மிக்க நன்றி சகோ.

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011