Thursday, November 10, 2011

புதிதாக பிளாக் துவங்க துணுக்குகள்

,
இணயத்தில் புதிதாக பிளாக் துவங்குவோர்க்கென துணுக்குகள் தர ஆயிரக்கணக்கில் ஆட்கள் உள்ளனர். இருந்தாலும் அதில் துவங்கியதற்கு பின்னர் என்ன செய்யவேண்டும் என்றே பலர் கூறியுள்ளனர். ஆகவே இன்று எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பிளாக் முகவரியை தேர்ந்தெடுப்பது: 
முடிந்த வரை உங்கள் பிளாக் முகவரியை user friendly மற்றும் SEO friendly-யாக தேர்ர்ந்தெடுக்கவும், அதற்க்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கை எதற்க்காக தூவுங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும்.

தயவு செய்து template-ஐ மாற்றுங்கள்:
ப்ளாகர் default-ஆக மொக்க template கொடுத்திருக்கும் தயவு செய்து அதை மாற்றுங்கள், அப்பொழுதுதான் உங்கள் பிளாக் பார்பதற்க்கு மிகவும் ப்ரொஃபஷனல்-ஆக இருக்கும். மேலும் நல்ல template மற்றும் custom டொமைன் இருந்தால், புதிதாக வருகை தரும் பலரால் உங்களுடையது வலைபூவா அல்லது வலைதளமா என்று கணிக்க இயலாது.
 [பின்குறிப்பு: இப்பொழுது .in டொமைன் ஒரு வருடத்திற்க்கு இலவசமாக கூட கிடைப்பதாக கேள்வியுற்றேன்]

எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்:
இப்பொழுதுதான் உங்களுக்கு என்ன எழுத வேண்டும் என்ற சந்தேகம் வரும், நிறைய விஷயம் தெரிந்தவர்கள் கவலையில்லாமல் நிறைய நல்ல நல்ல Articles எழுதுவார்கள் ஆனால் அவர்களை விட நிறைய தெரிந்ததினாலோ என்னவோ சிலருக்கு ஒன்றுமே தோன்றாது. அப்படி இருப்பவர்களுக்கென்றே Odesk என்று பிரித்யோகமான வலைத்தளம் ஒன்று உள்ளது, உங்கள் தேவையை அங்கு பதிவு செய்து விட்டால் 1$-க்கும் குறைவான விலையில் நல்ல தனித்துவமான Articles கிடைக்கும். மனமிருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று உலகிற்கே பறைசாற்றுங்கள்:
உங்கள் வலைப்பூவை Facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களிலும்,  Digg, Technorati & Yousaytoo போன்ற ஆங்கில திரட்டிகளிலும் பிரபலப்படுத்துங்கள். மேலும் சக பதிவர்களின் வலைபூவையும் படித்து பின்னூட்டமிடுங்கள். அதுபோக நிறைய discussion forums-இல் கேட்கப்படும் கேள்விக்கு விடை தெரிந்தால் மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியை குறிப்பிட்டு பதில் அளியுங்கள். உங்கள் template-இல் Meta tags மற்றும் keywords சேர்த்தால் google போன்ற தேடுதளத்தில் கண்டுபிடிக்க படுவீர்கள்.






இன்றைய செய்தி:

Facebook-இல் பதிவுகளை automatic-ஆக பகிரும் வசதி கூடிய விரைவில் நிறுத்தப்பட உள்ளது. இனிமேல் தனிதனியாகத்தான் link-களை பகிர முடியும்.


படித்ததில் பிடித்தது:


காற்றைப்பிடிக்கும் கணக்கை அறிந்தவன்
கூற்றை உடைத்து குதித்திடுவானே..

11 comments to “புதிதாக பிளாக் துவங்க துணுக்குகள்”

  • November 10, 2011 at 4:31 AM

    உண்மையில் புதிதாய் ப்ளாக் ஆரம்பிப்பவர்களுகும் ஆரம்பித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் இருப்பவர்களுக்கும் பயன்பட கூடியது.Odesk என்று பிரித்யோகமான வலைத்தளம் புதிய தகவல்...

    delete
  • November 10, 2011 at 4:35 AM

    @ R.CHINNAMALAI

    நன்றி நண்பா...

    delete
  • November 10, 2011 at 4:57 AM

    பாஸ் இந்த இடுகையின் தலைப்பை சரி பாருங்கள்....

    delete
  • November 10, 2011 at 5:04 AM

    @ சண்முகம்

    மிக்க நன்றி நண்பரே..
    சரி செய்து விட்டேன்

    delete
  • November 10, 2011 at 9:17 AM

    //அங்கு பதிவு செய்து விட்டால் 1$-க்கும் குறைவான விலையில் நல்ல தனித்துவமான Articles கிடைக்கும். மனமிருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.//

    அடப்பாவி மக்கா

    இந்த கொடுமை வேறையா???

    delete
  • November 10, 2011 at 8:37 PM
    Unknown says:

    பயனுள்ள தகவல்

    delete
  • November 11, 2011 at 8:20 AM

    @ stalin wesley

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பா...

    delete
  • November 11, 2011 at 8:24 AM

    @ ஆமினா

    // அடப்பாவி மக்கா

    இந்த கொடுமை வேறையா???//

    நான் ஒரே ஒரு தளத்தை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன் சகோதரி, அது போல freelance தளங்கள் நிறைய உள்ளன, (for ex mturk by amazon)

    நல்ல விஷயம் என்னவென்றால், அங்கே worker ஆக நம்மை பதிந்து விட்டால் நாமும் அடுத்தவர்களுக்கு எழுதி கொடுக்கலாம். (coding எல்லாம் தெரிந்தால் செம மாலு)

    delete
  • November 11, 2011 at 8:26 AM

    @ சிநேகிதி

    நன்றி சகோதரி..

    delete
  • February 14, 2012 at 9:45 PM
    KARTHIKEYAN says:

    I am also introducing the websites to earning online through my blog kindly visit and share your comments pls.
    karthikeyan
    http://internetnanban.blogspot.in

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011