அன்பான தமிழ் வாசகர்களுக்கு..
என்னுடைய என்னுடைய புதிய முயற்சியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம், சும்மா படித்துதான் பாருங்களேன்...
அன்பான மனைவிக்கு மல்லிகையை
ஆசையாய் சூடிட வாங்கிச்சென்றேன்
இன்பமாய் சூடிக் கொள்ளாமல்
ஈகையுடன் வந்தென்னிடம்- அன்பே
உங்களுக்கேன் வீண் சிரமம்
ஊரில் அய்யன் வாங்கிவருவார்-அவர்போல்
எனக்கிந்த பூவை வாங்கிட
ஏறுபூட்டி உழுதிட வேண்டா,
ஐய்யமென்று தங்கல்பால் நான்வரின்
ஒவ்வாமல், வினவி- புறத்தே
ஓடிட செய்தால் ஐய்யத்தை
ஒளவையைவிட பேருபெறுவேன் நானென்றாள்.
படித்துவிட்டீர்களா?
இப்பொழுது உனக்கு ஏனடா இந்த வீண் முயற்சி என்று திட்ட தோன்றினால், இருக்கவே இருக்கிறது பின்னூட்டப் பெட்டி (அதாங்க நண்பரே.. comment box)
Tweet
என்னுடைய என்னுடைய புதிய முயற்சியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம், சும்மா படித்துதான் பாருங்களேன்...
அன்பான மனைவிக்கு மல்லிகையை
ஆசையாய் சூடிட வாங்கிச்சென்றேன்
இன்பமாய் சூடிக் கொள்ளாமல்
ஈகையுடன் வந்தென்னிடம்- அன்பே
உங்களுக்கேன் வீண் சிரமம்
ஊரில் அய்யன் வாங்கிவருவார்-அவர்போல்
எனக்கிந்த பூவை வாங்கிட
ஏறுபூட்டி உழுதிட வேண்டா,
ஐய்யமென்று தங்கல்பால் நான்வரின்
ஒவ்வாமல், வினவி- புறத்தே
ஓடிட செய்தால் ஐய்யத்தை
ஒளவையைவிட பேருபெறுவேன் நானென்றாள்.
படித்துவிட்டீர்களா?
இப்பொழுது உனக்கு ஏனடா இந்த வீண் முயற்சி என்று திட்ட தோன்றினால், இருக்கவே இருக்கிறது பின்னூட்டப் பெட்டி (அதாங்க நண்பரே.. comment box)
அ முதல் ஒள வரை பயன்படுத்தி கவிதை. சூப்பர் சகோ. அதிலும் தூய தமிழ் மிக மிக அருமை.
சுத்த டமில்லா இருக்கே....
கொஞ்சமா புரியுது...கவிதை நாயகன் பூ வாங்கி தரார். நாயகி எதுக்கு வீண் சிரமம் என சொல்லிவரைக்கும் நல்லா புரிஞ்சது. அதுக்கப்பறம் விளக்க முடியுமா? நமக்கு உங்களவுக்கு நாலேஜ் கிடையாது தாத்தா :-(
நண்பா கண்டிப்பாய் யாரிடம்மும் சொல்ல மாட்டேன்.தமிழில் அருமையாய் எழதி உள்ளிர்கள்.நீங்கள் ஒரு தமிழ் பித்தன் போங்க...
@ Prabu Krishna
நன்றி சகோதரா......
அதாவது பேத்தி, நம்ம நாயகர், ஏற்கனவே தன் மேலே சந்தேகப்பட்ட மானைவியை நையப்புடைத்துவிட்டு தான், இந்த சமாதான முயற்சியை அரங்கேற்றியுள்ளார்,
அதற்க்கு நம் நாயகி, நான் தாய் வீட்டில் இருந்த வரை தன் தந்தையார் தன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியது மட்டுமில்லாமல் (அவர்போல்
எனக்கிந்த பூவை வாங்கிட
ஏறுபூட்டி உழுதிட வேண்டா,) தான் கேட்ட ஐய்யம் இன்னும் விளக்கப்படமால் இருக்கின்றது என நாசூக்காக உணர்த்தியுள்ளாள்.
@ R.CHINNAMALAI
நன்றி நண்பரே....
//தான் கேட்ட ஐய்யம் இன்னும் விளக்கப்படமால் இருக்கின்றது என நாசூக்காக உணர்த்தியுள்ளாள்.//
வாவ்....
தெளிவாகிய பின் படித்தால் சங்க கால அகப்பொருள் இலக்கியம் போல் இருக்கு...
வாழ்த்துக்கள் தாத்தா :-)
விளக்கத்திற்கு நன்றி :-)
நா 2 பின்னூட்டம் போட்டேன்னே... ஒன்ன காணாம்???
தங்கள் பின்னூட்டம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது பேத்தியாரே...
வாழ்துக்களுக்கு நன்றிகள் பல சமர்ப்பணம் பேத்தியாரே...
ஐயானே...
முதல் வருகையிலேயே தமிழ்பருகும் அரும் பேறு பெற்றேன் நன்றி...
@ ♔ம.தி.சுதா♔
நன்றி சகோதரரே....
ஆகா.... அ முதல் ஔ வரை கவி வரிகளால் பாடம் நடத்தி விட்டீர்களே.... அருமை தமிழ் தாத்தா
@ தமிழ்வாசி - Prakash
நன்றி பேராண்டி....