Tuesday, October 11, 2011

மதம் நல்லது

,
அந்த மத போதகர் மிகவும் ஆச்சார்யமானவர், தினமும் இரண்டு முறை குளிப்பார், நான்கு முறை கடவுளை வழிபடுவார், எந்நேரமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மதத்தை மிகவும் மதிப்பவர்.

ஆனால் அவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை. அவர் மதத்தை பற்றி யாரேனும் எதேனும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் கடும் கோவம் வந்து அந்த இடத்தை விட்டு சென்று விடுவார், மற்றபடி அவர் யாரையும் கோவப்படுத்தவோ காயப்படுத்தவோ மாட்டார்.

திடீரென்று ஒருநாள் அவர் இறந்து விட்டார். கால தூதர்கள் அவரை இறைவனிடம் அழைத்து சென்றார்கள்.

அங்கு இறைவன் தன் கணக்காளனிடம் அவருடைய பாவ புண்ணிய கணக்குகளை கேட்டார், உதவியாளர் இவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை, அதனால் இவரை நரகதுக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.

இதை மத போதகர் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரை அர்ததுடன் பார்த்த கடவுள், சொர்க்கதுக்கு அனுப்ப வேண்டும் என்று உதவியாளரை பணித்தார். ஆச்சர்ய்மடைந்த உதவியாளர் கடவுளிடம் ஏன் என்று கேட்டார்.

அதற்கு கடவுள் கொடுத்த விளக்கம் இதோ:

அந்த மத போதகர் இதுவரைக்கும் எந்த நல்லதும் செய்யவில்லை அதேசமயம் யாருக்கும் எந்த கெடுதலும்  செய்யவில்லை, அவர் மத வெறியராக இருந்தாலும் மற்றவர்களை தன் மதத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தவும் இல்லை.

அந்த மனிதர் எந்த மதம் தெரியுமா? உங்கள் மதம் தான்.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் மட்டும் தான் சொர்க்கம் என்றில்லை, முடிந்தவரை கெடுதல் செய்யாமல் இருப்பதும் சொற்கத்துக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க சகோ:

அந்த காலத்தில் மனிதர்கள் பாவம் செய்வதை பார்துக்கொண்டிருந்த பெரியவர்கள்  மதம் என்பதை உருவாக்கினார்கள் அதற்கென சில கோட்பாடுகளை வைத்தார்கள். ஓரிடதில் இது நல்ல வெற்றியாக, விஷயம் நாளா பக்கமும் பரவ, அங்கங்கே மதங்கள் உருவாகின ஆனால் அதெல்லாம் மக்கள் நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்தால் மதம் என்ற மாயைக்கு இடமே இருக்காது.

1 comments:

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011